தமிழ் சினிமாவைச் சேர்ந்த பிரபல காமெடி நடிகர் கருணாகரன். இவர் சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள காரப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இதனிடையே தன்னுடைய வீட்டின் பீரோவிலிருந்த 60 சவரன் நகை திருடு போனதாக கண்ணகி நகர் போலீசில் கருணாகரன் புகாரளித்தார். அதனடிப்படையில் போலீசார் அவரது வீட்டில் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சோதனை செய்தனர். அப்போது, அங்கு பணிபுரியும் விஜிலா மேரி(38) என்ற பெண் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அப்பெண்ணை கைது செய்தனர்.