தென்கொரியாவில் அவசர நிலை அமலுக்கு வருவதாக அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோல் அறிவித்துள்ளார். தொலைக்காட்சி வாயிலாக மக்களுக்கு உரையாற்றிய யூன் சுக் யோல், "வட கொரிய படைகளின் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும் உள்நாட்டில் தேச விரோத சக்திகளை ஒழிக்கவும் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது" என அறிவித்தார். தென்கொரியாவில், 44 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.