உணவில் கலக்கும் மைக்ரோ ப்ளாஸ்டிக்... உயிருக்கே ஆபத்து..!

66பார்த்தது
உணவில் கலக்கும் மைக்ரோ ப்ளாஸ்டிக்... உயிருக்கே ஆபத்து..!
உணவை டப்பர் வேர் தொடங்கி பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துவைத்துதான் சாப்பிடுகிறோம். பல வீடுகளில் தக்காளி வெங்காயம் கூட அப்படித்தான் சேமித்து வைக்கப்படுகின்றன. இது ஒரு பக்கமென்றால், தண்ணீர் விற்பனைகூட இப்போது ப்ளாஸ்டிக் மயமாகிவிட்டது. இப்படி எல்லாவற்றையும் ப்ளாஸ்டிக்கிலேயே செய்வதால் பல நோய் அபாயங்கள் ஏற்படுகின்றன.

ஏனெனில் ப்ளாஸ்டிக் டப்பாக்கள் / பாட்டில்களில் உள்ள ரசாயனங்கள், நாள்படும்போது உருகி உருகி அந்த டப்பாக்களில் உள்ள உணவில் கலந்துவிடும். இதனால் மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள் உணவில் கலக்கின்றன. இவை உடலுக்கு மிக மிக தீங்கானது. சாதாரண வயிற்றுப்போக்கு தொடங்கி புற்றுநோய் வரை பல மோசமான மற்றும் நீண்ட நாள் பாதிப்பை உடலில் ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்தி