மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 26,000 கனஅடியாக அதிகரிகப்பட்டுள்ளது. வினாடிக்கு 21,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் 4,500 கனஅடி நீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் 16 கண் மதகு வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 16 கண் மதகு வழியாக 4,500 கனஅடி நீரும், நீர் மின் நிலையம் வழியாக 21,500 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.