சென்னையில் சாலையோர வாகன நிறுத்தத்திற்கு புதிய ஒப்பந்தம் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்தி கொள்ளலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, கட்டணம் செலுத்த வேண்டாம் எனவும் மீறி கட்டணம் வசூலிக்கப்பட்டால் காவல்துறையில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.