சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் ரயில் முனையம் அமைந்துள்ளது. இந்த நிலையில் சென்னையின் நான்காவது ரயில் முனையம் பெரம்பூரில் அமைய உள்ளது. இதற்கான அனுமதியை தெற்கு ரயில்வே வழங்கியுள்ளது. அதன்படி, பெரம்பூர் Loco Works ரயில் நிலையம் அருகே உள்ள இடத்தில் ரூ. 428 கோடி செலவில் புதிய ரயில்வே முனையம் அமைய உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.