கற்பூரவல்லி இலைகளில் வைட்டமின் ஏ, சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உள்ளுறுப்புகள் முதல் சருமம் வரை உடலை கவசம்போல் பாதுகாக்கிறது. கற்பூரவல்லி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது. இதன் சாற்றின் சில துளிகளை அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும்.