மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களும் பேசி தீர்வு காண வேண்டும் என மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்துள்ளார். மேலும் அவர், கடந்த 10 ஆண்டுகளில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ரயில் திட்டத்திற்கு ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன் மேகதாது அணை கட்டப்படும் என சோமண்ணா கூறிய கருத்தை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் இதுகுறித்து தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.