கட்டட வரைவுபட அனுமதி காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து 8 ஆண்டுகளாக உயர்த்தியமைக்காகவும், விரைவாக கட்டடங்கள் கட்டுவதற்கு மனைப் பிரிவுகள் மற்றும் மனைகளுக்கு 60 நாட்களுக்குள் அனுமதி வழங்க ஒற்றைச் சாளரமுறை (Single Window System) அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தமைக்காகவும் மேலும் கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டமைக்காகவும் முதலமைச்சரை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன் குமார் உள்ளிட்ட பலர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.