நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ சேவைகள் மட்டும் நாளை (ஆக.12) இடைநிறுத்தப்படும் என்று குடியுரிமை மருத்துவர்கள் சங்கம் (FORDA) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9-ம் தேதி கொல்கத்தாவில் ஜூனியர் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.