உலகை அச்சுறுத்தி வரும் HMPV வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என்று மருத்துவர்கள் கூறினாலும் பாதுகாப்பாக இருந்துகொள்வது நல்லது. இருமல், தும்மல், சளி, உடலின் பிற திரவங்கள், கைகுலுக்குதல் போன்ற நெருங்கிய தொடர்பு மூலம் HMPV வைரஸ் பரவுகிறது. வாய், மூக்கு, கண்களை தொடுவதன் மூலமும், வைரஸ் பாதித்த மேற்பரப்பை தொடுவதன் மூலமும் இது பரவலாம். அடிக்கடி கைகளை கழுவுவதும், மாஸ்க் அணிவதும் இந்த வைரஸிலிருந்து தப்பிக்கும் வழிகளாகும்.