முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முதல் 48 மணி நேரத்திற்கான பணமில்லா சிகிச்சைக்கான கட்டணத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளாகி முதல் 48 மணி நேரத்தில் ஒருவரிடத்தில் பணம் இருக்கிறதோ இல்லையோ மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்த்து அரசின் சார்பில் ரூ.2 லட்சம் வரை அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.