ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தின் உண்டி மண்டலத்தில் திருமணமான இளம் பெண்ணை இரண்டு ஆண்கள் போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தங்களது விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால் அப்பெண்ணின் கணவரை கொண்டுவிடுவதாக மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அப்பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்து ரூ.2.50 லட்சம் பணம் பறித்துள்ளனர். இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் யெர்ராம் ஷெட்டி ரவி மற்றும் சோமு என்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.