வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றிய மாரி செல்வராஜ்

66பார்த்தது
இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் குழுவினர் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றிய பிரத்யேக வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பெய்த பெருமழையால் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசின் மீட்பு, நிவாரண பணிகளுக்கு மத்தியில் இயக்குநர் மாரி செல்வராஜ் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றியுள்ளனர்.