அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நேரம் நெருங்கி வருவதால் அதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 22ஆம் தேதி ராமர் சிலை வழிபாட்டிற்காக 108 அடி உயர ஊதுபத்தி தயாராகி வருகிறது. குஜராத்தின் வதோதராவில் இந்த ஊதுபத்தி தயாரிக்கப்படுகிறது. அதே போல், அயோத்தி நகரில் சர்வதேச விமான நிலைய கட்டம்-1 திட்டம் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.