அமைச்சர் பொன்முடி நீதிமன்றம் வருகை

1924பார்த்தது
அமைச்சர் பொன்முடி நீதிமன்றம் வருகை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வருகை தந்துள்ளனர். இன்று காலை 10.30 மணிக்கு தண்டனை விவரங்களை நீதிமன்றம் அறிவிக்கிறது. வருமானத்திற்கு அதிகமாக 64.90% சொத்து சேர்த்தது நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று முன்தினம் அறிவித்தார். பொன்முடி வருகையையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேசியக்கொடி இல்லாத காரில் நீதிமன்றத்தில் இருவரும் வருகை தந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி