ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் திடீர் மாயம்...

58101பார்த்தது
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் திடீர் மாயம்...
திருவண்ணாமலை: வேட்டவலத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (51), லட்சுமி (46) தம்பதி. இவர்களுக்கு மகன், 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் துர்காவுக்கு (26) திருமணமாகி மகள்கள் மோனிகா (6), மகாலட்சுமி (4), மகன் உதயா (ஒன்றரை வயது) உள்ளனர். இரண்டாவது மகள் சாமுண்டீஸ்வரிக்கு (23) திருமணமாகி மகள் தர்ஷினி (4), மகன் சபரிநாதன்(3) உள்ளனர். இதில் துர்கா, சாமுண்டீஸ்வரி அவரவர் கணவர்களைப் பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டிலேயே வசித்து வந்தனர்.

டிசம்பா் 13ஆம் தேதி துர்கா, சாமுண்டீஸ்வரி ஆகியோர் தங்களது குழந்தைகளுடன் திடீரென காணாமல் போயினர். இதுகுறித்து, வேட்டவலம் போலீசில் லட்சுமி புகாா் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து 5 குழந்தைகள் உட்பட 7 பேரை தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி