வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு ச
ெய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், அமைச்சர்
பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர், எம்எல்ஏ பதவியையும் பொன்முடி இழக்கிறார். இதன் மூலம் தண்டனை அனுபவித்த பின் சுமார் 6 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் கூறப்படுகிறது.