திரைப்படங்களில் மணிவண்ணன் பேசிய அரசியல்

72பார்த்தது
திரைப்படங்களில் மணிவண்ணன் பேசிய அரசியல்
மணிவண்ணன் தான் இயக்கிய திரைப்படங்களில் சாமானிய மனிதன் பாணியில் சம கால அரசியலை தனக்கே உரிய நக்கலில் அழுத்தமாக பேசினார். இதனால் தான் அப்போதே வெறும் வசனங்கள் மட்டும் அடங்கிய முதல் வசந்தம், அமைதிப்படை திரைப்படங்களின் கேசட்டுகள் அன்றைய காலக்கட்டத்திலேயே 2 லட்சத்தை தாண்டி விற்பனையானது.

இவரது படைப்புகளில் என்றென்றும் நினைவுகூறத்தக்க ஒன்றாக 1994ல் வெளியான “அமைதிப் படை” திரைப்படம் அமைந்தது. இப்படத்தில் வரும் அமாவாசை கதாபாத்திரம் மிகவும் பிரபலம். அமாவாசை எப்படி நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ-வாக உருவானார் என்ற அழுத்தமான அரசியல் நையாண்டி சினிமாதான் இந்த அமைதிப்படை.

தொடர்புடைய செய்தி