மனைவியின் தலையுடன் வாக்கிங் சென்ற நபர் (வீடியோ)

55பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள பசரா கிராமத்தை சேர்ந்த அனில் கனௌஜியா ராஜ்கீர், வந்தனா தம்பதி. கடந்த 8 ஆடுகளுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தனது மனைவி வேறு ஒரு நபருடன் தகாத உறவு வைத்துள்ளார் என சந்தேகித்த அனில், மனைவியை கொல்ல முடிவெடுத்துள்ளார். சம்பவத்தன்று 9:30 மணியளவில் அரிவாளால் தனது மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் தலையை துண்டாக்கி அதை கையில் எடுத்துக்கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார். இதனை பார்த்து அச்சமடைந்த மக்கள் போலீசிடம் குடுத்த தகவலின் பேரில் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி