திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு 9 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மாயாண்டி (24) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் மீதான வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் மாயாண்டிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் நேற்று (நவ. 05) தீர்ப்பளித்தது.