மகாராஷ்டிரா அரசு நாட்டு பசுமாடுகளை ராஜமாதாவாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா முழுவதும் பல்வேறு வகையான மாடுகள் இருக்கின்றன. ஆனால், நாட்டு மாடுகளின் எண்ணிக்கை அண்மை காலமாக வெகுவாக குறைந்து வருகிறது. சமூக - பொருளாதார காரணிகளுடன் மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு பசுக்கள் ராஜமாதாவாக அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.