மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகரிடம் வாக்குமூலம்

82பார்த்தது
மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகரிடம் வாக்குமூலம்
மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் சாஹில் கானின் வாக்குமூலத்தை மும்பை போலீசார் இன்று பதிவு செய்ய உள்ளனர். மாட்டுங்கா காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் வழக்கு விசாரணைக்காக மும்பை குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கரைச் சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பால் ஆகிய இருவரும் மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வந்தனர். இந்தச் செயலி மூலம் தினமும் ரூ.200 கோடி லாபம் ஈட்டிய அவர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு பெரும் தொகையை லஞ்சமாக வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி