சென்னை அசோக்நகர் அரசுப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் வகையிலும், மாணவர்களிடம் மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் பேசியதாக மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். தற்போது, மகா விஷ்ணு மன்னிப்பு கோரியதை அடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது. சிறை வாசலில் மகா விஷ்ணுவின் ஆதரவாளர்கள் மாலை அணிவித்து, பூக்களை தூவி வரவேற்றனர். தொடர்ந்து, சிறைவாசலில் வைத்தே தனது ஆதரவாளர்களுக்கு மகாவிஷ்ணு ஆசி வழங்கினார்.