மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அரசமரத்துப்பட்டி கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் குள்ளபுரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் 4 ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கிராமத்தில் களப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதில் அரசமரத்துப்பட்டி அரசு ஆரம்ப பள்ளி மாணவ மாணவிகளுடன்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மழை நீர் சேகரிப்பு குறித்து கையில் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்று கிராம பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி நடத்தினார்கள். ஆரம்ப பள்ளி மாணவ மாணவிகளுடன் மற்றும் ஊர் பொதுமக்களோடு சேர்ந்து மழை நீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.