மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலூகா டி. செட்டியார்பட்டியை சேர்ந்த நந்தகுமார் (36) என்பவர் பெங்களூரில் உள்ள ஐ. டி. கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர் பேரையூர் தாலூகா அதிகாரிபட்டியில் நடந்த திருவிழாவிற்காக வந்திருந்தார்.
நந்தகுமார் நேற்று (அக்.,10)அதிகாரிப்பட்டி கருத்தப்பாண்டி தோட்டத்தில் கிணற்றில் குளித்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து அவரது மனைவி ரேவதி சேடபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பிறகு விசாரணை நடத்தி வருகின்றனர்.