திருப்பரங்குன்றம் - Thiruparankundram

திருப்பரங்குன்றம்: அன்னாபிஷேக வழிபாட்டில் பக்தர்கள்

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலை சார்ந்ததும், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் அமைந்துள்ள அருள்மிகு பால் சுனை கண்ட சிவபெருமான் திருக்கோயிலில் ஐப்பசி பௌர்ணமி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இங்கு பஞ்சலிங்கம் முன்பு புனித நீர் குடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதன் தொடர்ச்சியாக 108 மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.  பின்னர் லிங்கத்திற்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து பூஜையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் குடங்கள் மங்கள வாத்தியங்களுடன் சங்கொலி முழங்கிட ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பஞ்சலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னம் சாத்துபடி செய்து காய்கறிகள் பழங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட 108 மூலிகை அபிஷேகத்திலிருந்து பெறப்பட்ட பிரசாதம் நாள்பட்ட உடல் நோய் உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்பதால் ஐப்பசி பௌர்ணமி சிறப்பு பூஜையில் மதுரையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా