சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜ்குமார். இவர் விருதுநகர் மாவட்டம் திம்மாபுரம் பகுதியை சேர்ந்தவர். விடுப்பில் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று (நவ. 11) இரவு சொந்த ஊருக்கு செல்வதற்காக மதுரை விமானநிலையம் பகுதியில் உள்ள மண்டேலா நகர் பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வாகனத்தில் வந்த நபர் காவலரிடம் வழி விடவில்லை என கூறி தகராறு செய்துள்ளார்.
ஊருக்கு செல்வதால் (லக்கேஜுடன்) உடைமையுடன் இருப்பதால் ஏன் அவசரப்படுகிறாய் என ராஜ்குமார் கூறியதையடுத்து ராஜ்குமாருக்கும் ஆறுமுகத்திற்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில் ஆறுமுகம் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலரின் கழுத்து மற்றும் இடுப்பில் குத்தியுள்ளார்.
காயமடைந்த காவலரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து சோழங்குருணியை சேர்ந்த வீரமலை என்பவரின் மகன் ஆறுமுகம் (39) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். என்று அவனியாபுரம் போலீசாரின் முதல் கட்ட விசாரணைக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.