மதுரை: பக்தர்களின் புலம்பல் கோவில் நிர்வாகத்திற்கு கேட்குமா?

68பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (நவ. 7) சஷ்டி விரத திருவிழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றதால் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் தங்கள் காலணிகளை கோயில் வாசல் பகுதியில் மற்றும் சாலைகளில் ஆங்காங்கே கழட்டி போட்டுவிட்டு கோவிலுக்கு சென்றனர். கட்டணமில்லா காலணி காப்பகம் கோவிலுக்கு எதிர் புறம் இருந்தாலும் அது பக்தர்களுக்கு பயன்படாமல் பூட்டியே கிடக்கிறது. கோவில் நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கட்டணமில்லா காலணி காப்பகத்தை திறந்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் செயல்பட வேண்டும் என்று கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பலர் புலம்பியபடியே சென்றதை கேட்க முடிந்தது. கோவில் நிர்வாகத்தின் காதுகளுக்கு பக்தர்களின் புலம்பல் கேட்குமா?

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி