மதுரை வில்லாபுரத்தில் உள்ள சங்கவிநாயகர் கோவில் நூற்றாண்டு கால பெருமை உடையது. இக்கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம் இவ்வாண்டும் கடந்த 2ஆம் தேதி முதல் கந்தசஷ்டி விரதம்காப்பு கட்டுதலுடன் துவங்கிவிழா நடைபெற்றது.
இதில் கடந்த ஆறாம் தேதி சக்திவேல் வாங்கும் விழாவும், ஏழாம் தேதி முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்கார விழாவும் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று (நவ. 8) கந்தசஷ்டி விழாவின் நிறைவாக முருகன் தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
சங்க விநாயகர் திருக்கோவில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் நிறுவனர் என். கே. சி. செல்லையா அம்பலம் சொர்ணத்தம்மாள் குடும்பதார் மற்றும் பொதுமக்கள் சார்பாக திருக்கல்யாண விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரத்திற்கு மேற்றப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்ட்டது.