மாணவர்களுக்கு ராஜீவ் காந்தி விருதினை வழங்கிய எம். பி.

62பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாரத ரத்னா ராஜீவ் காந்தி விருது சான்றிதழ்களை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வழங்கினார்.

2023 - 24 கல்வியாண்டில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட 10, 11, 12ம் வகுப்பில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பள்ளியளவில் முதல், மூன்று இடங்களை பிடித்த மாணவ , மாணவிகளுக்கு பாரட்டு சான்றிழ் "பாரத ரத்னா ராஜிவ் காந்தி "விருதுகளை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணக்கம் தாகூர் வழங்கினார்.

கூட்டத்தில் எம். பி பேசியதாவது.

கொல்கத்தாவில் 36 மணி நேரம் பணிபுரித்த மருத்தவரை நோயாளி ஒருவர் பாலியல் வன்மம் செய்து கொலை செய்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது.
மாணவிகளே, மாணவர்களே நீங்கள் பழகுங்கள் ஆனால் வன்மம் எண்ணம் வேண்டாம்.
இருபாலருக்கும் பழக்கம் தேவை தான்
உங்களுக்குரிய திருமண வயது 21 ஆகையால் அதுவரை கவனமுடன் படியுங்கள்.

உங்களின் உயர்ந்த எண்ணங்கள் உயர்ந்த செயல்களாய் லட்சியமாக வேண்டும்.
கொல்கத்தா மருத்தவருக்கு 1 நிமிடம் நாம் மொளன அஞ்சலி செலுத்துவோம் என மாணவர்களிடம் மாணிக்கம் தாகூர் கூறினார்.

பின்னர் 127 பள்ளிகளை சேர்ந்த 769 மாணவ, மாணவிகளுக்கு பாரத ரத்னா ராஜீவ் காந்தி விருது சான்றிதழ் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி