மன்னர் கல்லூரியில் தேசிய உற்பத்தி திறன் நிறைவு விழா.

61பார்த்தது
மன்னர் கல்லூரியில் தேசிய உற்பத்தி திறன் நிறைவு விழா.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள மன்னர் கல்லூரியில் தேசிய உற்பத்தித்திறன் வார நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

மதுரை உற்பத்தித்திறன் குழுவின் சார்பில் உற்பத்தித்திறன் வார நிறைவு விழா மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நடந்தது.

இதற்கு தலைவர் ராஜேந்திரபாபு தலைமை வகித்தார். செயலாளர் ஜெகன்மோகன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, வார விழா தலைவர் சவுந்தர ராஜன், துணைத் தலைவர் பிரதாப் சேது முன்னிலை வகித்தனர்.

இதில் மாணவர்களுக்கு 'செயற்கை நுண்ணறிவு எந்த வகையில் கிராமங்களுக்கு உதவியாக இருக்கும் என்ற தலைப்பிலும், தொடர்ந்து தொழிலாளர்களுக்கு 'செயற்கை நுண்ணறிவு தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்துவதன் மூலம் எவ்வாறு உற்பத்தியை பெருக்க முடியும்' என்ற தலைப்பிலும் போட்டி நடைபெற்றது.

இதில் மதுரையில் உள்ள பல கல்லூரிகளிலிருந்து மாணவர்கள், தொழிற்சாலை பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இங்கு நடைபெற்ற போட்டியில் வென்ற தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் பரிசு வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி