மதுரை: பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை

74பார்த்தது
மதுரை: பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை
மதுரை அருகே சிலைமான் அருணாச்சலநாடார் தெருவைச் சேர்ந்த கல்லாணையின் மகன் வசந்த் (22) என்பவர் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். இவருக்குத் திருமணம் ஆகவில்லை. இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் (மார்ச். 31) வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி