திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா திருப்பரங்குன்றம் எம். எல். ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது.
பின்னர் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது_
உதயநிதி துணை முதல்வர் என்று ராஜா கண்ணப்பன் கூறிவிட்டு மறுத்தது குறித்த கேள்விக்கு
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் இல்லை. உதயநிதி துணை முதலமைச்சர் என்பது அந்த கட்சியில் அவரை விட நிறைய அனுபவம் உள்ளவர்கள் உள்ளனர். ஒருத்தர் அந்த பதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். எனவே அது வளர்ச்சி அல்ல
எஃப்4 கார் பந்தயம் குறித்த கேள்விக்கு?
கார் பந்தயம் அவசியமா என்று அதிமுகவும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கேள்வி எழுப்புகின்றனர் அதன் விளைவாக எத்தனை விபத்துகள் வந்தாலும் திமுக அரசு அதன் பொறுப்பு ஏற்க வேண்டும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் ஏற்படுகிறது எனவே அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இதற்காக தொழில் அதிபர்களிடம் பணம் பெறுவதாகவும் தொடர்ந்து செய்தி வருகிறது இந்த கார் பந்தயம் நிச்சயமாக நடக்காது அதற்காகத்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம் நடப்பதற்கு வாய்ப்பில்லை நடந்தாலும் மக்களுக்கு பயனில்லை.