பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லத்தில் மாவட்ட ஆட்சியர்.

64பார்த்தது
மிகச்சிறந்த தமிழ் பற்றாளரான பரிதிமாற் கலைஞர் 154 வது பிறந்த தினம் இன்று விளாச்சேரியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் கொண்டாடப்பட்டது.

தமிழ் செம்மொழியாக முதல் குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞருக்குஅரசு சார்பில் நடைபெறும் விழாவில் மரியாதை செலுத்த வந்த மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விளாச்சேரியை சேர்ந்த முகமது மைதீன் தனது வீட்டில் இருந்து சாலை நோக்கி செல்லும் ஊராட்சி சாலையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் சந்தித்து புகார் மனு அளித்தார். அதன் பின்னர் மனு அளிக்க வந்த முகமது மைதீன் குழந்தைகளிடம் தங்களுக்கு எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா கேட்டபோது குழந்தைகள் காவல்துறை, தீயணைப்பு துறை, மருத்துவத்துறை போன்ற பல்வேறு துறைகளில் அதிகாரியாக குறிப்பிட்டதால் இந்த விளாச்சேரி கிராமத்தில் அனைத்து துறையைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக குழந்தைகளை வெகுவாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பாராட்டினார்,

எதிர்காலத்தில் தங்களை நாடி வந்தால் எங்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர் மனு அளித்த முகமது மைதீனிடம் ஆக்கிரமிப்பு குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துவிட்டு காரில் புறப்பட்டார்.

தொடர்புடைய செய்தி