திருமங்கலம்: தேவர் மணிமண்டபம் புதுப்பிக்க 3 லட்சம் நிதியுதவி
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி, கள்ளிக்குடி ஒன்றியம், குராயூர் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திருவுருவ சிலை உள்ள மணிமண்டபத்தை புதுப்பித்து மேம்படுத்துவதற்காக மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக ரூபாய் 3 லட்சத்தை நேற்று (நவ. 5) மாவட்ட செயலாளர் மணிமாறன் அவர்கள் வழங்கினார். உடன் மதுரை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கள்ளிக்குடி ஒன்றிய திமுக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.