மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி அருகே சட்ட விரோத கல் குவாரிகளை எதிர்த்து திருமால் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் இன்று (அக். 18) காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல் குவாரியால் 35க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்கள். இவர்களுக்கு ஆதரவாக விவசாய சங்கங்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். கல் குவாரியால் திருமால் கிராமம் பெரிதும் பாதித்துள்ளதாக கிராம மக்கள் வேதனைப்பட்டனர்.