பிளாஸ்டிக் பொருட்களில் உள்ள தாலேட்கள் குறை பிரசவத்தை ஏற்படுத்துவதாக அமெரிக்க மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். 5,000 கர்ப்பிணிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களில் உடலில் பல்வேறு தாலேட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் ஒரு வகையான DEHP என்ற ஆபத்தான ரசாயனம் எந்த கர்ப்பிணிகளுக்கு இருந்ததோ, அவர்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்புகள் 50% இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ரசாயனம் உணவுகளை அடைத்து விற்கப்படும் கவர்களில் அதிகம் உள்ளன.