திருமங்கலம்: கடன் தொல்லையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

56பார்த்தது
திருமங்கலம்: கடன் தொல்லையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேரையூர் கல்லுப்பட்டி ராம் நகரில் வசிக்கும் சந்தோஷ் குமார் (30) என்பவர் சிசிடிவி பிட்டிங் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் பல நபர்களிடம் கடன் பெற்று இருக்கிறார். அந்தக் கடனை அவரால் திருப்பி செலுத்த முடியாத நிலையில் நேற்று (நவ. 1) காலை 6: 00 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி தீபா தேடிக் கொண்டிருக்கும் வேளையில் பேரையூர் கே கே ஜி பள்ளியில் அவர் தூக்கிட்டு இறந்திருப்பதாக தகவல் தெரிந்து அங்கே சென்று பார்த்தபின் பேரையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி