உத்தரப் பிதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த பிரியன்ஷா சோனி என்ற பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கணவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நவராத்திரி நாளில் அப்பெண்ணிற்கு மாதவிடாய் ஆனதால், பூஜை செய்ய வேண்டாம் என்ற குடும்பத்தினர் கூறியுள்ளனர். மாதவிடாய் காரணமாக கடவுளுக்கு நவராத்திரி பூஜை செய்ய முடியாத விரக்தியில், பிரியன்ஷா சோனி இந்த தற்கொலை முடிவு எடுத்ததாக கூறியுள்ளார். தொடர்ந்து கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.