தெலங்கானா மாநிலம் சந்திரயாங் பேட்டையைச் சேர்ந்த அமீன் அகமது அன்சாரி என்ற இளைஞர், தனது தந்தை 2021ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கருணை அடிப்படையில் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியில் சேர்ந்தார். இவர் 7 அடி உயரம் என்பதால் பேருந்தில் தலையை குனிந்த படி பணியாற்றி வருகிறார். இதனால், கழுத்து வலி, முதுகு வலி மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு, அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.