காந்தி ஜெயந்தியன்று மது விற்பனை செய்த முதியவர் கைது

76பார்த்தது
காந்தி ஜெயந்தியன்று மது விற்பனை செய்த முதியவர் கைது
மதுரை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று (அக். 2) நேற்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், மது விற்பனை கூடாது என்றும் மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்த நிலையில் திருமங்கலம் பேரையூர் அருகே வண்டாரி மாயன் (77) என்ற முதியவர் ஊரில் மது விற்றுக் கொண்டிருப்பதாக பேரையூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக சென்ற ரோந்து போலீசார் அங்கு பார்த்த போது மது விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி