முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், போராட்ட குழுவினர் கைது

76பார்த்தது
மதுரை கப்பலூர் டோல்கேட்டை இடமாற்றம் செய்து நிரந்தரமாக தீர்வு காண கோரி திருமங்கலம் தொகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர், இதனை தொடர்ந்து பல கட்ட வார்த்தையில் நடைபெற்றதில் தோல்வி அடைந்ததில் கப்பலூர் டோல்கேட்டை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் போராட்ட குழு உண்ணாவிரதம் இருந்தனர் அதனை தொடர்ந்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்

முன்னதாக கப்பலூர் டோல்கேட்க்கு வந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார
பொதுமக்களிடத்தில் மனுக்கள் வாங்க வேண்டும் அனுமதி தாருங்கள் என்று கேட்ட பொழுது, அதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது தொடர்ந்து காவல்துறையிடம் கடுமையான வாக்குவாததிற்கு பின்பு அனுமதி கொடுக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மனு கொடுக்க வந்த பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் கப்பலூர் டோல்கேட் அகற்றப்படும் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். தற்போது 3 ஆண்டுகள் அகற்றப்படவில்லை எனவே அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல உண்ணாவிரதம் இருக்கிறோம் என்று அறிவித்து இருந்த போது காவல்துறையினர் கைது மேல கோட்டையில் உள்ள கல்யாண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர் இதனை தொடர்ந்து அந்த மண்டபத்தில் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை உதயகுமார் ஈடுபட்டார்



.

தொடர்புடைய செய்தி