மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கர்னல் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தை தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களுடன் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இணைந்து மக்களின் பயன்பாட்டிற்கு இன்று (ஜன. 12) காலை திறந்து வைத்தார்கள்.
அதனை தொடர்ந்து மேலூர் நகராட்சி வார்டு எண்- 23 அம்மன் நகரில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகம், சிவன் கோவில் தெருவில் புனரமைக்கப்பட்ட நகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.