அழகர் கோயிலில் பக்தர்களுக்கு இன்று முதல் லட்டு

82பார்த்தது
அழகர்கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் துவக்கம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் நாள் முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி ராமசாமி பக்தர்களுக்கு இலவசமாக லட்டுகளை வழங்கினார்.

ஆலயத்தில் தினமும் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படுகின்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி