மதுரை மாவட்டம் மேலூரில் 3 கோடியே 45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை, காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்ததை அடுத்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மேலூர் யூனியன் அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏற்றி கலந்துக் கொண்டனர். மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, மேலூர் நகராட்சி சேர்மன் முகமது யாசின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்