லிப்ட் கேட்பது போல நடித்து செல்போனை திருடிய இளைஞர்கள் கைது

53பார்த்தது
லிப்ட் கேட்பது போல நடித்து செல்போனை திருடிய இளைஞர்கள் கைது
மதுரையில் லிப்ட் கேட்பது போல நடித்து செல்போனை திருடிய இளைஞர்கள் கைது - தப்பியோட முயன்று பாலத்தில் இருந்து குதித்தில் காலில் எலும்பு முறிவு- மருத்துவமனையில அனுமதி

மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்த மகாலிங்கம் (30) என்பவரிடம் லிப்ட் கேட்பது போல நடித்து இருவர் செல்போனை திருடி சென்றதாக அளித்த புகாரில் செல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்

காவல்துறை விசாரணைக்காக செல்லூர் Lic பாலம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற கோமுட்டி விஜய்(26), நவின்குமார்(22) உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் அழைத்தபோது தப்ப முயன்றதில் பாலத்தில் இருந்து குதித்து கோமுட்டி விஜய்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டுள்ளனர்.

காவல் துறை விசாரணையின் லிப்ட் கேட்டு பைக்கில் சென்று தனது நண்பர்களுடன் இணைந்து இருட்டான பகுதியில் லிப்ட் கொடுத்த நபரை மிரட்டி செல்போனை திருடியது உறுதி செய்யப்பட்ட நிலையில் செல்போனை காவல்துறை பறிமுதல் செய்தனர் - பின்னர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கோமுட்டி விஜய், நவின்குமார் மற்றும் சிறார் ஒருவர் என மூவரை செல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி