காவல்துறையினர் மற்றும் மக்களை இணைக்க வாட்ஸ்அப் குழு அமைப்பு

66பார்த்தது
காவல்துறையினர் மற்றும் மக்களை இணைக்க வாட்ஸ்அப் குழு அமைப்பு
மதுரை மாநகர பகுதிகளில் உள்ள வார்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் குழுக்களில் அந்தந்த காவல் நிலைய எல்சிக்கு உட்பட்ட காவல் ஆய்வாளர்கள் சார்பாய்வாளர்கள் அட்மின் ஆக இருப்பார்கள் எனவும், இந்த குழுக்களில் பொதுமக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாகவும் புகார்களை உரிய ஆதாரங்களுடன் தகவல் அளிக்கலாம்.

இந்த வாட்ஸ் அப் குழுக்களில் அரசு அதிகாரிகள் அரசுத்துறை சார்ந்த நபர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளதால் பொதுமக்கள் ஏதேனும் ரகசிய தகவல்களை தகவல் அளிக்க அட்மின் மூலமாக தனியாக அனுப்பலாம் எனவும் ஒவ்வொருவரின் தகவலும் ரகசியம் காக்கப்படும்.

மாநகர் பகுதிகளில் முழுவதிலும் உள்ள 150 க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குழுக்கள் முழுவதிலும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு அதிகாரிகளால் முழுவதும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

வாட்ஸ் அப் குழுக்களில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் சட்ட ஒழுங்கு பிரச்சனை சமூக விரோதிகள் நடமாட்டம் போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பான தகவல்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளிட்ட தகவல்களை அனுப்பலாம். வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்படும் தகவல்களை குழுவில் உள்ள உறுப்பினர்கள் வேறு குழுக்களில் பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி