மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நகர் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, ஏழை எளியோர், மாணவ-மாணவிகளுக்கு
நல திட்ட உதவிகள் வழங்கும் விழா, கிருஷ்ணா மஹாலில் நடந்தது.
இந்த விழாவிற்கு, சங்கத்
தலைவர் ராமசந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் ஆளுநர் பொறியாளர் ராதாகிருஷ்ணன் , புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தினார். புதிய உறுப்பினர்களை, முன்னாள் ஆளுநர் வேலாயுதம் சங்கத்தில் இணைத்தார்.
மண்டல தலைவர் சையது ஜாபர், வட்டாரத் தலைவர் பரிசுத்து ராஜன், வடிவேல் வாழ்த்துரை வழங்கினார்கள். தலைவராக பாபு, சரவணன், செயலாளராக சிவசங்கரன், பொருளாளராக ராஜ பிரபு மற்றும் புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்றனார்.
மாவட்டப் பெரறுப்பாளர் சிவகுமார் சேவை திட்டத்தை
துவக்கிவைத்தார்.
இந்த விழாவில், ஏழை எளியோருக்கு அரிசி, வேட்டி சேலையும், அரசு பள்ளியில் 10, 12ஆம் வகுப்பு முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவர் மாணவிகளுக்கு பரிசு மற்றும் கேடயங்களும், அன்பே கடவுள் பார்வையற்றோர் இல்லத்திற்கு அரிசி மூடைகளும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மூன்று மின்விசிறி வழங்கப்பட்டது. பொது
மக்களுக்கு மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.