கம்யூனிஸ்ட் கட்சி பேரணிக்கு எதிராக காட்டமாக பேசிய அமைச்சர்

68பார்த்தது
13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாவை முதலமைச்சரும் துணை முதலமைச்சர் வழங்க இருக்கிறார்கள். இதில் எவனும் உரிமை கொண்டாட முடியாது. தகுதி இல்லாதவர்களை அழைத்து பட்டா கொடுக்கிறேன் என சொல்லி திசை திருப்புகிற வேலையை விட்டுவிட வேண்டும்.

நம்முடைய முதலமைச்சர் எது சட்டத்திற்கு உட்பட்டதோ அதன்படி அத்தனை ஏழை எளிய மக்களுக்கும் தகுதியுடையவர்களுக்கு நம்முடைய முதலமைச்சர், துணை முதலமைச்சர் பட்டா வழங்குவார்கள் அதற்கான பணி துவங்கிவிட்டது.

பெயருக்காக, தன்னுடைய தர்ப்பத்திற்காக, தன்னுடைய புகழுக்காக எதையாவது பெற்றுத் தருகிறேன் என தவறான பிரச்சாரம் செய்வதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மக்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என அளித்த வாக்குறுதியை முதலமைச்சர் செய்துவருகிறார்.


நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது. உச்சநதிமன்ற தீர்ப்பை மதித்து நடக்கக் கூடியது தான் நம்முடைய ஆட்சி‌. கிடைக்காததை கிடைக்கும் என்றும் வாங்கி தருவோம் என்று சொல்லியும் வருபவர்களை தயவுகூர்ந்து நீங்கள் நம்பி ஏமாந்து விட வேண்டாம். தகுதி உள்ளவர்களுக்கு நிச்சயமாக பட்டாவை பெற்று தரக்கூடிய பணியை அரசுத் துறையும் உள்ளது அரசு அதிகாரிகளும் முழுவீச்சில் பணிகளை செய்து வருகின்றனர் என திமுக கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி